IPL தொடரின் 19-வது சீசனுக்கு முன்னதாக, வீரர்களுக்கான மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஏலத்தை இந்தியாவில் நடத்த BCCI ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஏலத்திற்கு முன்னதாக, 10 IPL அணிகளும் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை நவ.15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என BCCI காலக்கெடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், டிரேடிங் முறையில் வீரர்கள் அணிமாற்றம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.