ஹார்முஸ் நீரிணை மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் தலையீடு இருக்கும் வரை எந்தவொரு கப்பலும் இதன் வழியே செல்ல அனுமதி இல்லை எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இதற்கிடையே, வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறி, ஈரான் மீது
அமெரிக்கா 3வது சுற்றுத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் வளைகுடாவில் பதற்றம் அதிகரித்துள்ளது.