ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் பலியானதற்கு பதிலடியாக, குவைத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது ஈரான் இன்று (மார்ச் 2) டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த திடீர் தாக்குதலால் தூதரக பகுதியில் அபாய சங்கொலி முழங்கப்பட்டு பலத்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரு தரப்பிலும் மோதல்கள் அதிகரித்து வருவதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியற்ற சூழல் நிலவுவதுடன், சர்வதேச நாடுகள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன.