ஈரானுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தை கடுமையாக சீர்குலைத்து, எண்ணெய் விலைகளை பல ஆண்டுகளில் கண்டிராத அளவிற்கு உயர்த்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஈரான் ஒரு நாளைக்கு சுமார் 3.1 மில்லியன் பீப்பாய்களை உற்பத்தி செய்து வருகிறது. உலகின் 3வது பெரிய கச்சா எண்ணெய் இருப்புக்களை அந்நாடு வைத்திருப்பதாகவும் நம்பப்படுகிறது. தற்போது பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 73 அமெரிக்க டாலர்களில் வர்த்தகமாகிறது.