அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்தும்
போர் 21-வது நாளாகத் தொடர்கிறது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு, பாரசீக வளைகுடாவில் 3,200 வணிகக் கப்பல்கள் சிக்கியுள்ளன. நடுக்கடலில் தத்தளிக்கும் மாலுமிகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ப
ாதுகாப்பு கருதி துறைமுகங்களில் ஒதுங்க அவர்களுக்கு
அனுமதி மறுக்கப்படுகிறது. கப்பல்கள் கைவிடப்பட்டால் பெரும் சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.