அமெரிக்கா-ஈரான் போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள சிக்கலால், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு குறித்த அச்சம் நிலவுகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க்குகள் மூடப்படும் என்ற சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல் தவறானது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. பிரதமர் மோடி பொது போக்குவரத்தை பயன்படுத்தவும், குழுவாக பயணிக்கவும் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.