சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரிகளுக்குப் பொறியியல் அங்கீகாரம் வழங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மைய இயக்குநர் மற்றும் துணை இயக்குநர்கள் உள்ளிட்ட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 2023 - 2024ஆம் ஆண்டு காலகட்டங்களில் தமிழ்நாட்டில் உள்ள 480 கல்லூரிகளில் 224 கல்லூரிகளில் முறைகேடு நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.