திருநெல்வேலியின் புகழ்பெற்ற அடையாளங்களில் ஒன்றான இருட்டுக்கடை அல்வாவுக்கு 2026-ம் ஆண்டுக்கான Food Connoisseurs India Awards விழாவில் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற விழாவில், “Best Sweet Shop of the Year (South)” என்ற விருதை இருட்டுக்கடை அல்வா வென்றது. இதனை கடையின் உரிமையாளர் கவிதா சிங் பெற்றுக்கொண்டார். பல ஆண்டுகளாக பாரம்பரிய சுவையுடன் தயாரிக்கப்படும் இருட்டுக்கடை அல்வாவுக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், திருநெல்வேலிக்கு பெருமை சேர்த்துள்ளது.