IRCTC இணையதளம் வாயிலாக ஆன்லைனில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு ஜன.12-ம் தேதி முதல் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் முறைகேடுகளை தவிர்க்கவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு கவுண்டர்களில் நேரடியாக டிக்கெட் பெறுவதற்கு ஆதார் சரிபார்ப்பு தற்போதைக்கு தேவையில்லை என ரயில்வே நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.