அண்ணாமலையின் 42-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது குறித்து யாரிடமும் பேசவில்லை என விளக்கமளித்துள்ளார். மேலும், தற்போதைய தவெக அரசில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்வதாகவும், கரூரில் மதுபாட்டிலுக்கு ₹10 வசூலிப்பது நீடிப்பதாகவும் குற்றஞ்சாட்டிய அவர், முதல்வர் விஜய் தன் பொறுப்பறிந்து செயல்பட வேண்டும் என்றார்.