தவெக தலைவர் விஜய்யின் முக்கிய அரசியல் வியூக வகுப்பாளராக ஜான் ஆரோக்கியசாமி இருந்துவருகிறார். இந்நிலையில், ஆதவ் அர்ஜுனா கட்சியில் இணைந்த பிறகு புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்து தவெகவில் இருந்து விலகக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் வியூகங்கள், மாநாடு திட்டமிடல், கட்சி பிராண்டிங் உள்ளிட்ட பணிகளில் முக்கியப் பங்காற்றிய அவர், தற்போது தனது முக்கியத்துவம் குறைந்ததாக கருதுவதால் கட்சிக்குள் அதிருப்தியில் உள்ளதாக தவெக வட்டாரங்கள் கூறியுள்ளன.