P MARQ ரிபப்ளிக் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 118-138 இடங்களை பிடிக்கும் என்றும் பாஜக 150-175 இடங்களை பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பாஜக முதன்முறையாக ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 2 முதல் 6 இடங்களை பெறுவதற்கே வாய்ப்பு உள்ளது என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 முதல் தொடர்ச்சியாக 3 முறை திரிணாமுல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி முதலமைச்சராக இருந்து வருகிறார்.