உலக தோசை தினம் நாளை (மார்ச்.2) கொண்டாடப்படவுள்ள நிலையில், தினமும் தோசை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதுதான் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சாதாரண தோசையுடன் தானியங்கள், கறிவேப்பிலை, வெந்தயம் மற்றும் கீரைகளை சேர்த்து சமைப்பதன் மூலம் அதன் ஊட்டச்சத்தை அதிகரிக்கலாம் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக, உடல் எடையை அதிகரிக்க விரும்புவோர் சட்னியில் புரோட்டின் நிறைந்த பாதாம் மற்றும் பிஸ்தாவை சேர்த்து கொள்வது சிறந்த பலனை தரும் என கூறப்படுகிறது.