வெயிலின் தாக்கம் காரணமாக முதற்கட்டத்திலேயே தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடத்த வலியுறுத்தி உள்ளோம் என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், வேட்பு மனுவுக்கு 10 நாள் முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் திருவிழாக்கள், பண்டிகைகளை கணக்கில் கொண்டு தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தினார்.