கிரகண நேரத்தில் கர்ப்பிணிகள் நடப்பதும் உண்பதும் பாதுகாப்பானதா?

23பார்த்தது
கிரகண நேரத்தில் கர்ப்பிணிகள் நடப்பதும் உண்பதும் பாதுகாப்பானதா?
கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் நடப்பதோ, உண்பதோ கருவிலுள்ள குழந்தையை பாதிக்கும் என்பதற்கு அறிவியல் ஆதாரங்கள் இல்லை என மருத்துவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். கதிர்வீச்சால் உணவு நஞ்சாகும் என்பது வெறும் நம்பிக்கையே தவிர உண்மை அல்ல. இருப்பினும், சூரிய கிரகணத்தின் போது வெளியாகும் புற ஊதா கதிர்கள் கண்களை பாதிக்கும் என்பதால், வெறும் கண்களால் கிரகணத்தை பார்ப்பதை தவிர்த்து மற்றபடி இயல்பான பணிகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி