சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எது சுயமரியாதை என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது, "சசிகலா காலில் ஈபிஎஸ் விழுந்து முதலமைச்சர் பதவி பெற்றது தான் சுயமரியாதையா? திராவிட கட்சியான அதிமுகவிற்கு ஆரியரான ஜெயலலிதா தலைவரானது எப்படி? கார் டயரை விழுந்து கும்பிட்டது என்ன சுயமரியாதை? சுயமரியாதை என்ற சொல்லை உச்சரிக்க திமுக, அதிமுகவிற்கு தகுதி இருக்கிறதா?" என கூறினார்.