2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவருமான கருணாஸ், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு திமுக பக்கம் சாய்ந்தார். தற்போது 2026 தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் ஒரு தொகுதி கிடைக்கும் என கருணாஸ் நம்பிக்கை தெரிவித்திருந்தார். உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் அவர், திருவாடனை அல்லது தென் மாவட்டங்களில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் களமிறங்குவார் என தெரிகிறது.