மாமன்னர் பூலித்தேவர் சமுதாய தலைவரா? - சர்ச்சையில் சிக்கிய அரசு அதிகாரி

1572பார்த்தது
மாமன்னர் பூலித்தேவர் சமுதாய தலைவரா? - சர்ச்சையில் சிக்கிய அரசு அதிகாரி
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் மங்களம் கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவர் சிலை அருகே பேவர் பிளாக் பதித்து, சீட் அமைத்து குடிநீர் வசதி ஏற்படுத்தி தர ஒரு அமைப்பு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர், பூலித்தேவரை சமுதாய தலைவர் என்று கூறி இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளார். சமுதாயத் தலைவருக்கும் சுதந்திரப் போராட்ட வீரருக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் ஒரு பி.டி.ஓ. இருக்கிறார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி