லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி போராடிய சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பாகிஸ்தான் ஏஜெண்ட் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து பேசியுள்ள லடாக் டிஜிபி சிங் ஜம்வால், "சோனம் வாங்சுக்குக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.