பெண்களுக்கு பணம் கொடுப்பது முன்னேற்றமா? - குஷ்பு கேள்வி

5பார்த்தது
பெண்களுக்கு மாதம் ரூ.1,000 அல்லது ரூ.2,000 வழங்குவது மட்டுமே முன்னேற்றமாகாது என்றும், அவர்கள் சொந்த காலில் நிற்பதே உண்மையான வளர்ச்சி என்றும் பாஜக நிர்வாகி குஷ்பு தெரிவித்துள்ளார். திமுகவினர் பெண்களை வெறும் போக பொருளாகவே பார்க்கிறார்கள் என குற்றம் சாட்டிய அவர், பெண்களை மதிக்க தெரியாதவர்களால் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது என விமர்சித்துள்ளார். பண உதவிக்கு அப்பால் பெண்களுக்கான சுயசார்பு மற்றும் மரியாதையை உறுதி செய்ய வேண்டும் என்பதே அவரது கருத்தின் சாரமாகும். நன்றி:PT