உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்தை பெற காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான நேரமே சிறந்தது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த இடைப்பட்ட நேரத்தில் புற ஊதா கதிர்கள் வீரியமாகவும், நிழல்கள் குறைவாகவும் இருப்பதால், சுமார் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருப்பது அதிகப்படியான பலனை தரும். கைகள், கால்கள் மற்றும் முகம் போன்ற உடல் பாகங்களில் நேரடியாக சூரிய ஒளி படும்போது, வைட்டமின் டி இயற்கையாகவே உடலில் உற்பத்தியாகிறது.