இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரின் 3வது ஆட்டம் ஹோபர்ட்டில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. சஞ்சு சாம்சன், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவுக்கு பதிலாக ஜிதேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளனர். முன்னதாக மிடில் ஆர்டர், பினிஷிங் என மாறி மாறி களமிறக்கப்பட்ட சஞ்சு சாம்சன் அணியில் இருந்து நீக்கப்பட்டதால், அவரது டி20 எதிர்காலம் சந்தேகத்தில் உள்ளது.