1980 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட எம்ஜிஆர் வாய்ப்பு வழங்காததால், அப்போதைய தாரமங்கலம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு, அதிமுகவை தோற்கடித்தவர் செம்மலை. அப்படிப்பட்டவரை, தாராபுரம் பொதுக்கூட்டத் திடலில் வைத்து போகிற போக்கில் கட்சியில் இணைத்திருக்கிறார் முதலமைச்சர்
விஜய். பிரச்சார வேனில்கூட ஏற்றவில்லை. இதில் ரொம்பவே அப்செட்டாகிவிட்டாராம் செம்மலை. முதலமைச்சர் வருகைக்காகக் காத்திருந்த அவரை, செங்கோட்டையனைத் தவிர மற்ற அமைச்சர்கள் யாருமே கண்டுகொள்ளாததும் அவருக்கு வருத்தத்தை உண்டாக்கியிருக்கிறதாம்.