தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பில் கவனம் செலுத்தாதது ஏன்? என தவெக அரசுக்கு
திமுக செய்தித்தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கேள்வியெழுப்பியுள்ளார். முதலமைச்சர் ஆகும் முன்
விஜய் பதவிட்ட ட்வீட்டை மறுபதிவு செய்துள்ள சரவணன், 'தன்னுடைய ஆட்சியில் தமிழகமே பெரும் கொடுமைக்கு உள்ளாகி இருப்பதைக் கண்டுகொள்ளாமல், தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி வரும் முதலமைச்சர் அவர்களே' என சாடியுள்ளார்.