மாற்று
அரசியல் தருவதாக கூறிவிட்டு, தவெக தற்போது திமுகவின் பாதையிலேயே பயணிக்கிறதா என்று தமிழக
பாஜக முன்னாள் மாநில தலைவர்
அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இளம்பெண் ஒருவருக்கு
வேலை வாங்கி தருவதாக கூறி தவெக நிர்வாகிகள் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய
திமுக அரசின் வழியிலேயே புதிய கட்சியான தவெகவும் செல்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.