பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் விழுப்புரம் தைலாபுரத்தில் அவசர ஆலோசனை இன்று (பிப்., 22) நடத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எம்எல்ஏ அருள், “பிப்., இறுதியில் கூட்டணி குறித்த அறிவிப்பை ராமதாஸ் வெளியிடுவார்” என்றார். தொடர்ந்து, தவெக உடன் கூட்டணி வைக்க இருப்பதாக பாமக உறுப்பினர்கள் கூறுவதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “யாருக்கும் எதுவுமே தெரியாது. நீங்க போட்டு வாங்காதீங்க” என்றார். மேலும், தனித்து போட்டியா? என்ற கேள்விக்கு இல்லை என பதிலளித்துள்ளார்.