நியாய விலைக் கடைகளில் பொருட்கள் சரியான எடையில் கிடைப்பதை உறுதி செய்ய, மின்னணு தராசுகளில் இருபுற டிஸ்ப்ளே வசதி தெளிவாக உள்ளதா என்பதைப் பணியாளர்கள் கட்டாயம் சரிபார்க்க உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது. பொதுமக்களுக்குக் குறைவான எடையில் பொருட்கள் வழங்கப்படுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொறுப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.