கல்லூரி சுற்றறிக்கை விவகாரத்தில், கம்யூனிஸ்ட்டுகளைத் தமிழக அரசு ஒடுக்க நினைக்கிறதா என சிபிஎம் சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். சிபிஐ, சிபிஎம் தடை செய்யப்பட்ட கட்சிகளா என்றும், அதிகாரிகள் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளனர் என்றும் வினவிய அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இதனால் அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகள் தலைமைக்கு அழுத்தம் தந்துள்ளனர்.