2026 சட்டசபை தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குறுதியான மகளிர் உரிமைத் தொகையை ரூ.2500 ஆக உயர்த்துவது குறித்து த.வெ.க. அரசு ஆலோசித்து வருகிறது. முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்றதும் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலால், மே மாதத்திற்கான உரிமைத் தொகை ரூ.1000 மட்டுமே வழங்கப்பட்டது. தற்போது, 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தை மறுசீரமைத்து, 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' எனப் பெயர் மாற்றி, முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 முதல் ரூ.2500 வழங்கும் திட்டத்தை தொடங்க த.வெ.க. திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.