மீனவர்கள், பல்வேறு
அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிடுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர்
விஜய் சட்டப்பேரவையில் அறிவித்திருந்த இந்த திட்டத்திற்கு, 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து,
போராட்டம் வெடிக்கும் என்றும் எச்சரித்திருந்தனர். இதனால் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவும், இசிஆரில் மாற்று இடங்களை ஆய்வு செய்யவும் முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.