SIR படிவத்தில் ஒரு தெளிவும் இல்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், “SIR படிவத்தில் முதலில் நம்முடைய விவரங்களைக் கேட்கிறார்கள். அடுத்தபடியாக, முந்தைய வாக்காளர் திருத்தப் பட்டியலில் உள்ள உறவினரின் பெயர் கேட்கப்பட்டுள்ளது. உறவினர் என்றால் யார்? அப்பாவா? அம்மாவா? அண்ணனா? தங்கையா? கணவனா? மனைவியா? பிள்ளைகளா? யார்?. இதில் ஏதாவது தெளிவு இருக்கிறதா?. நினைத்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.