தமிழகத்தில் தலைமைச் செயலகம் கட்டுவதற்கு வேறு இடமே இல்லையா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். வாக்குக் கேட்கும்போது தேவைப்பட்ட மீனவ மக்களின் குரல், ஆட்சிக்கு வந்த பிறகு ஆட்சியாளர்களுக்குக் கேட்கவில்லையா என்றும் அவர் சாடியுள்ளார். சொந்த மண்ணிலேயே மக்கள் தங்கள் உரிமைகளை இழந்துவிடுவோமோ என்ற அச்ச உணர்வை அரசு ஏன் உருவாக்குகிறது என்றும் சீமான் தனது அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.