டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில் தவெக தலைவர் ஏன் பங்கேற்கவில்லை, அவருக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டதா என்பது குறித்து தெரியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தவெக ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடக்கிறதா என தெரியாது. அதற்கு வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். தவெகவிற்கு ஆதரவு தரும் கூட்டணி கட்சியினர் ஆதரவை திரும்ப பெற போவதில்லை. தவெக எம்எல்ஏக்கள் அந்த அளவிற்கு பலவீனமாக இருக்க மாட்டார்கள் என கூறினார்.