தென்காசியில் அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இன்று (டிச.3) வெளியிட்ட பதிவில், “இந்த கொலை சம்பவம் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கின் முகமூடியைக் கிழித்து, அதன் உண்மையான அலங்கோலத்தைக் கண்முன் நிறுத்தியுள்ளது. குற்றசம்பவங்களில் NO.1 மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியது தான் இந்த ஸ்டாலின் மாடல் அரசின் சாதனை” என விமர்சித்துள்ளார்.