சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், புதிதாக கட்சி தொடங்கியுள்ள தவெக தலைவர் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், நாகப்பட்டினம், விக்கிரவாண்டி, வேளச்சேரி, விருகம்பாக்கம் இந்த நான்கு தொகுதிகளில் ஒரு தொகுதியில் விஜய் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஆலோசனையும் நடந்துவருவதாக கூறப்படுகிறது.