ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அல்லது துருவ் ஜூரல் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கேப்டனாக உள்ள சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியுடன் டிரேட் செய்ய ராஜஸ்தான் அணி தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. ஜடேஜா அல்லது சாம் கரனை கொடுத்து சஞ்சு சாம்சனை பெற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முயன்றுவருவதாக கூறப்படுகிறது.