தவெக மாநாட்டில் பேசிய விஜய், மதுரைக்கு வந்ததும் என் அண்ணன் விஜயகாந்த் ஞாபகம் தான் எனக்கு வந்தது என்றார். எம்ஜிஆருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. ஆனால், அண்ணன் விஜயகாந்துடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது எனக் கூறினார். விஜயகாந்தின் படத்தை விஜய் பயன்படுத்த வேண்டுமானால், விஜயகாந்தை கொள்கை தலைவராக அறிவிக்கட்டும் என முன்னதாக பிரேமலதா கூறியிருந்தார். விஜய்யின் இந்த பேச்சு தேமுதிகவுடன் கூட்டணி அமைகிறாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.