ஈரான், லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் இன்று (பிப்.28) தாக்குதல் தொடுத்த சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அணு ஆயுத ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒப்புக்கொள்ளாமல் இருந்ததால், இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரான் எல்லையில் போர் கப்பல்களை நிறுத்தி எச்சரித்திருந்தன. இந்நிலையில் இஸ்ரேல் தற்போது தாக்குதலை தொடங்கியுள்ளது. இந்த தாக்குதலில் பள்ளி குழந்தைகள் 5 பேர் மற்றும் ஈரான் மத குரு கமேனியின் நெருங்கிய உதவியாளர் ஆகியோர் உயிரிழந்தனர்.