மத்திய கிழக்கில் பதற்றம் நீடி
த்து வரும் நிலையில், லெபனானின் கிழக்கே உள்ள பிஹா பள்ளத்தாக்கு பகுதியில் இஸ்ரேல் இன்று (மே 26) நடத்திய வான்வழி தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரான்-இஸ்ரேல் மோதலை தொடர்ந்து, ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வரும் ஹிஸ்புல்லா ஆயுத குழுவின் கட்டிடங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த வான்வழி தாக்குதலில் உயிரிழந்த 12 பேரில் எத்தனை பேர் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்தவர்கள் என்ற அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.