இஸ்ரேல் - அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஈரானின் பெண் குழந்தைகள் தொடக்கப்பள்ளி ஒன்று வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 148-ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என ஈரான் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த போர் நடைபெற்று வரும் நிலையில் உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.