எல்லாமே இங்குதான் தொடங்கியது.. த்ரிஷா வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ

3894பார்த்தது
அமீர் இயக்கத்தில் சூர்யா-த்ரிஷா நடித்த 'மௌனம் பேசியதே' திரைப்படம், காதலர் தினத்தை முன்னிட்டு பிப்.13-ம் தேதி மீண்டும் ரீ-ரிலீஸ் ஆக இருக்கிறது. இது குறித்து நெகிழ்ச்சியுடன் வீடியோ வெளியிட்டுள்ள த்ரிஷா, திரையுலகில் தனது பயணம் இந்த படத்திலிருந்தே தொடங்கியதாகவும், படப்பிடிப்பு தளம் ஒரு வீடு போன்ற உணர்வை தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தனது முதல் படம் சூர்யாவுடன் அமைந்த நிலையில், தற்போது 'கருப்பு' படத்திலும் அவருடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி