தவெகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காத சூழல் நிலவுவதால், புதிய தேர்தல் நடத்துவதே சிறந்தது என்று ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவர், மெஜாரிட்டி எண்கள் கிடைக்கவில்லை. அமைக்கப்படும் எந்த அரசாங்கமும் பல்வேறு இழுபறிகள் மற்றும் அழுத்தங்களால் நிலையற்றதாகவே இருக்கும். குடியரசுத் தலைவர் ஆட்சியுடன் புதிய தேர்தல்களை நடத்துவதே சிறந்த வழியாக இருக்கும். வாக்குக்கு பணம் இல்லை என்ற மிகக் கடுமையான அமலாக்கத்துடன் இதை செயல்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.