தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடல் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை, 3ல் இருந்து 5ஆக உயர்த்த அரசு தீர்மானித்துள்ளது. ‘இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தால் விரைவில் துணை வேந்தர்கள் நியமிக்கப்படுவர்’ என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். “இது போகக் கூடாத ஊருக்கு வழி காட்டும் செயல்” என அன்புமணி விமர்சித்துள்ளார். மேலும், “துணை வேந்தர்கள் நியமன நடைமுறையை மேலும் சிக்கலாக்கும் செயல்” என்றார்.