உத்தரப் பிரதேசத்தின் ஷாஜஹான்பூரைச் சேர்ந்த திருமணமான நேத்ரபால் என்பவர் பெண் ஒருவருடன் உறவில் இருந்துள்ளார். இதனை எதிர்த்து, அப்பெண்ணின் தாயார் அலகாபாத் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், அந்த ஜோடிக்கு எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என குடும்பத்தினருக்கு உத்தரவிட்டதோடு, அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்கவும் காவல்துறைக்கு ஆணையிட்டது. மேலும், ‘திருமணமான ஒருவர் வேறொருவருடன் லிவ்-இன் உறவில் இருப்பது குற்றமல்ல’ என தெரிவித்துள்ளது.