உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பொன்றில், மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டது மட்டும் கணவரை தற்கொலைக்குத் தூண்டியவர் என கருத முடியாது என தெரிவித்துள்ளது. இது குடும்பத் தகராறு வரம்பிற்குள் வரும் விஷயம் எனக் கூறி, கணவருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்தது. தற்கொலைக்கு நேரடி தூண்டுதல் அல்லது உறுதியான ஆதாரம் இல்லாமல் குற்றம் நிரூபிக்க முடியாது என்றும் நீதிமன்றம் விளக்கியுள்ளது.