மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையைத் தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயரும் எனக் கூறப்படுகிறது. இதனால், தமிழகத்தில் புதிய தவெக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்த "ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசம்" என்ற திட்டத்தைச் செயல்படுத்துவதில் பெரும் சவால் எழுந்துள்ளது. சிலிண்டர் விலை உயர்ந்தால் மாநில அரசுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படும் என்பதால், இத்திட்டம் தற்போதைக்குச் சாத்தியமில்லை என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.