முதலமைச்சர்
விஜய், வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நாடாளுமன்ற உரைகள் அடங்கிய நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நூலை வெளியிட, அதனை முதலமைச்சர்
விஜய் பெற்றுக்கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.