இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு தற்போது செயற்கை சுவாசக் கருவி பொறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, மருத்துவமனை விரைந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவரது உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, பல்வேறு கட்சி தலைவர்களும் மருத்துவமனை விரைந்துள்ளனர்.