தரக்குறைவான கருத்துகளை பேசுவது துரதிர்ஷ்டவசமானது - நடிகை த்ரிஷா

5182பார்த்தது
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நடிகை த்ரிஷா மற்றும் தவெக தலைவர் விஜய் குறித்து விமர்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் மூலம் அறிக்கை ஒன்றை த்ரிஷா வெளியிட்டுள்ளார். ஒரு பொறுப்பான பதவியில் இருப்பவர் இதுபோன்ற தரக்குறைவான கருத்துகளை பேசுவது துரதிர்ஷ்டவசமானது என்றும், த்ரிஷாவுக்கு எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பு இல்லை என்றும் அதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், தனது கலைப்பயணத்தை மட்டுமே அடையாளமாக கொள்ள த்ரிஷா விரும்புவதாகவும் கூறப்பட்டுள்ளது.

நன்றி:PT