முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தற்போது இங்கேயும் இல்லாமல் அங்கேயும் இல்லாமல், எங்கு செல்வது என்று தெரியாமல் இருப்பதை பார்க்கும்போது கஷ்டமாக இருப்பதாக பாஜக நிர்வாகி குஷ்பு தெரிவித்துள்ளார். யாராவது தன்னை சேர்த்து கொள்ள மாட்டார்களா என்ற நோக்கில் அவர் போராடி வருவதாகவும், அதன் வெளிப்பாடாகவே அவர் திமுகவுக்கு ஆதரவாக பேசி வருவதாகவும் குஷ்பு விமர்சித்துள்ளார். மேலும், ஓபிஎஸ் ஒரு நிச்சயமற்ற நிலையில் தவிப்பதாக அவர் கூறியுள்ளார்.